‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்!

0
107

‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்!

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் பலநாள் ஏக்கத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுமார் மூன்று வருடமாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது.

வலிமை படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் –                              எச்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள படம் வலிமை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை ஹூமா குரேஷி, வலிமை படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்த்துள்ளார். அவர் கூறுகையில், ‘வலிமை’ எனது திரை வாழ்வில் ஒரு சிறப்பான படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் வினோத் சார் எனது கதாபாத்திரத்தை நிறைய ஆக்சன் காட்சிகளை கொண்ட படமாக உருவாக்கி உள்ளார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தை பெற்றிருப்பதை காண மிக மகிழ்ச்சியாக இருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் அஜித் குறித்து கூறுகையில், வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்திய திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாகவும், வலிமை படத்தில் அஜித் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.