இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

0
186

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மகான். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து இருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக விக்ரமின் இந்த மகான் திரைப்படம் உருவாகி இருந்தது.

மகான் படத்தில் நடிகர் விக்ரம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து மகான் படத்தை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், விக்ரம் தரப்பில் இருந்து, விக்ரமின் மேனேஜர் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் வதந்தியே. இது ஒரு உறுதி செய்யப்படாத தகவல் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற செய்திகளை வெளியிடும்போது எங்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடவும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Previous articleஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 27ஆம் தேதி இதை செய்வது மிகவும் அவசியம்!
Next articleஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!