தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கியச்செய்தி:! இன்று இதைச் செய்ய தவறாதீர்கள்!!

0
152

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கியச்செய்தி:! இன்று இதைச் செய்ய தவறாதீர்கள்!!

தமிழகம் முழுவதும் இன்று(27.2.2022) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட, சுமார் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது.

சென்னையில் 1647 மையங்கள், சேலத்தில் 182 மையங்கள்,என மொத்தம் 43051 மையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள்,அரசு மருத்துவமனைகள்,சத்துணவு மையங்கள்,பள்ளிகள் என பல இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சொட்டு மருந்து போடும் பணியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டுமென்று, பெற்றோர்களை தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் காய்ச்சல்,இருமல் மற்றும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மையங்களில் அனுமதி இல்லையென்று அரசு தெரிவித்துள்ளது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டு,சொட்டு மருந்து போடாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்!
Next articleஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!