ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 11-ஆம் தேதி இறுதி விசாரணை. ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுறையை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் என்ன படவில்லை என்றும்.
கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் வழக்கில் அவர் கூறியிருந்தார். இதைப்போன்று தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது அதன்படி செப்டம்பர் 4 ஆம் தேதி ஐகோர்ட்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதற்கிடையே ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பத்துறை தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பின்னர் இந்த தடை நவம்பர் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை வருகிற டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகு மீண்டும் மூல வழக்கை நடத்த ஐகோர்ட்டை அணுகக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.