உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

0
133

ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

இந்த நிலையில், திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதன் காரணமாக, அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் வாழும் தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாப்பதில் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே உக்ரைனில் வாழும் தன் நாட்டு மக்களை பாதுகாப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது.

ஆனால் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும், பத்திரமாக வெளியேற்ற இந்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையை ஒட்டு மொத்த உலகமும் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சென்ற விமானங்களில் முதல் விமானம் கடந்த இருபத்தி ஆறாம் தேதி பிற்பகலில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் இலிருந்து 219 உக்ரைன் வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக விமானங்கள் அனுப்பப்பட்டு உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் உதவியோடு உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் இந்திய தேசிய கொடிகளை உயர்த்திக்கொண்டு எந்தவிதமான பயமுமில்லாமல் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு இதுபோன்று ஒரு மீட்புப் பணியை சாதகமாக்கி இருக்கிறது என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.

இந்தநிலையில், போர் காரணமாக, பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தன் நாட்டு மாணவர்களை பாகிஸ்தான் அரசு கைவிட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு எதையுமே செய்யவில்லை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். நிலைமை சீரான உடன் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசியக் கொடிகளை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து வெளியேறி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய நபர் ஒருவர் இந்த உண்மையை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனிலிருந்து எந்தவிதமான தாக்குதலுமின்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்ற காரணத்தால், பாகிஸ்தான் மாணவ, மாணவியர், இந்திய தேசிய கொடியை ஏந்தி பாரத மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் முன்னேறி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் குறித்து செய்திகளை அதிகம் தெரிவிக்கும் இந்துஸ்தான் ஸ்பெஷல் யூடியூப் சேனல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறது அதில் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் உக்ரைனிலுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய கொடியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

உக்ரைனிலுள்ள மெட்ரோ சுரங்க பாதைகளில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானிய மாணவர்களின் கணக்குகளையும் இந்துஸ்தான் ஸ்பெஷல் வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து யாரும் தங்களை காப்பாற்ற வராததன் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை இல்லாமல் அங்கேயே சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று அங்கிருக்கும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக சாடியிருக்கின்ற மாணவர் ஒருவர் அனைத்து மாணவர்களையும் வெளியேறிவிட்டதாக தூதரகம் பொய்யுரைத்து வருகிறது. ஆனால் நாங்கள் அனைவரும் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம். அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை வெளியேற்றுகிறார்கள் ஆனால் பாகிஸ்தான் அதை பற்றி கவலை படவேயில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

ராணுவ வீரர்கள் இந்திய கொடியை பார்த்து காட்டும் மரியாதையும் எங்களுக்கு பெருமை தான். இந்திய தேசிய கொடியை பார்த்தவுடன் எந்த விதமான சோதனையுமின்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஹங்கேரி எல்லையையடைந்த இந்திய மாணவர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அந்த மாணவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்!
Next articleஆளுங்கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! எதிர்க்கட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கு!