உக்ரைன் மீதான போர் எதிரொலி! ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவு!

0
112

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களாக தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதோடு உலகின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவை இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை நிர்பந்தம் செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் ஐநா சபையில் நடைபெற்ற ரஷ்யாவுக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்தது. இதன் காரணமாக, அமெரிக்கா இந்தியாவின் மீது கடும் கோபத்திலிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்கள் 10வது நாளை எட்டியிருக்கிறது. உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது உலக நாடுகள் தனிமை படுத்தினாலும் அதனை ரஷ்யா பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுதான் உள்ளது.

இதற்கு நடுவில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதலுக்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பல்வேறு நாடுகள் தொழில் நிறுவனங்கள் என்று பல தரப்பினரும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் சாம்சங் நிறுவனம் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது இதனடிப்படையில், சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்த நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, சாம்சங் நிறுவனத்தின் கைப்பேசி தொலைக்காட்சி உட்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும், ரஷ்யாவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு சாம்சங் நிறுவனத்தின் மற்ற சேவைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ஸ்மார்ட்போன் வருவாயில் சுமார் 4% ரஷ்யாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மூலமாக வருகின்றன ரஷ்யாவின் கலுகாவில் சாம்சங் தொலைக்காட்சி தயாரிப்பு ஆலையுமிருக்கிறது என சொல்லப்படுகிறது. தற்சமயம் நிலவிவரும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக சாம்சங நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது எங்களுடைய எண்ணங்கள் பாதிக்கப்பட்ட எல்லோருடனும் இருக்கிறது. எங்களுடைய அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ததே எங்களுடைய முன்னுரிமை எங்களுடைய நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6️ மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கின்றது என தெரிவித்தார்.

ரஷ்யா மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளிலிருந்து தென் கொரியாவிற்கு அமெரிக்கா விலக்கு வழங்கி இருந்தாலும் ரஷ்ய நாட்டிற்கு வரும் கப்பல் வழிகள் மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் உரிய நிறுவனங்களால் அந்த பகுதிக்கு பொருட்களை அனுப்புவதை கடினமாக்கியிருக்கின்றன. இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக உலகின் பல்வேறு பெருநிறுவனங்கள் தடைவிதித்திருப்பதால் இருப்பதால் அந்த நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்திருக்கிறது.

முன்னதாக ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். இந்த விதத்தில் சாம்சங் நிறுவனமும் தற்போது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் குதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற தீண்டப்படாத மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை கண்டனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் கணினி மென்பொருள் நிறுவனமான இன்டல் கார்ப்பரேஷன் போலவே ரஷ்யாவிற்கு கணினிகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருக்கும் எச்.வி கணினி நிறுவனம் ரஷ்ய நாட்டிற்கான ஏற்றுமதியை நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
Next article12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!