ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும் உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்!
உக்ரைனில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் ரஷ்ய மக்களை தன்வயப்படுத்திக் கொண்டு சென்ற மாதமே போர் தொடுக்க ரஷ்யா தயாராகிவிட்டது. ரஷ்ய மக்களுக்காக குரல் கொடுப்பதாக இந்தப் போரின் காரணம் முதலில் ஆரம்பித்தது. ஆனால் நாளடைவில் பல காரணங்களின் நோக்கம் தான் இந்தப் போர் என்று தெரியவந்தது. குறிப்பாக உக்ரைன் நேட்டோ அமைப்பில் அதிகளவு நாட்டம் காட்டி வந்தது. அவ்வாறு உக்ரைன் அந்த அமைப்பில் சேர்ந்து விட்டால் மற்ற நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவை தாக்க அதிக அளவு வாய்ப்பு இருந்தது.
இதனையெல்லாம் தடுக்கவே ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்தது. அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரையே முதலில் தாக்கியது. இந்தப் போரால் இருபக்கமும் பல உயிர் சேதங்கள் நடைபெற்றது. குறிப்பாக உக்ரைன் நாடு அதிக அளவு உயிர் சேதங்களை சந்தித்தது. மேலும் உக்ரைனின் அணு உலையை தாக்கியபோது அனைத்து நாடுகளும் பதறியது. போர் கடுமையாக நடைபெற்று வந்த வேளையில் 10வது நாளாக ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது. மனிதாபிமானம் என்ற பெயரில் மக்கள் வெளியேறுவதற்காக இந்த போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என ரஷ்ய அதிபர் கூறினார்.
மேலும் ரஷ்யா அதிபர், உக்ரைனின் கிழக்கு பகுதியில் அதிக அளவு ரஷ்ய மக்களின் ஆதிக்கம் உள்ளது. எனவே அங்கு உள்ள இரண்டு பகுதிகளை தனி குடியரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி கிரீமியா தீபகற்பத்தையும் ரஷ்ய பகுதிகளாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்தார்.மேலும் நேட்டோ அமைப்பில் இணைய போவதில்லை என்ற வாக்குறுதி அளிக்க வேண்டும் இவ்வாறான நிபந்தனைகளுக்கு உக்ரைன் கட்டுப்பட்டால் போர் தொடுப்பது நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் கூறியிருந்தார். ரஷ்யாவுடன் சமரசம் பேச போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது கூறியுள்ளார்.
அவர் ரஷ்ய கூறியதற்கு செவிசாய்க்கும் விதத்தில் தற்போது ஜெலன்ஸ்கி ஓர் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியது, நேட்டோ அமைப்பு உக்ரைனை இணைத்துக்கொள்ள தயாராக இல்லை. அதனால் அந்த அமைப்பில் சேரும் விருப்பத்தை தற்பொழுது கைவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரஷ்ய கூறிய நிபந்தனைகளில் ஒன்று நிறைவேற்றியதற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே இனி உக்ரைன், ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.