சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட காட்சிகள் திடீர் ரத்து! இனி ஓடிடி தளத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்!
தமிழ் திரை உலகில் சூர்யாவிற்கு என்று தனி இடம் உண்டு. தற்போது வரை பல வெற்றி படங்களை குவித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் இறுதியாக வந்த அவரது ஜெயின் பீம் படம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அதில் வன்னியர்களை அதிக அளவு சாதி வெறி பிடித்தவர்கள் போல காட்டியது இதன் முக்கிய காரணம். அதன்தொடர்ச்சியாக பலர் ஜிம் பீம் படத்தையும் சூர்யாவையும் எதிர்த்து வந்தனர்.குறிப்பாக அப்படத்தில் வன்னியர்களின் ஜாதி வெறி பிடித்து கொடுமை செய்பவர்கள் போல் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெருமளவு எதிர்ப்பு கிளம்பியதால் அப்படத்தின் இயக்குனர் வன்னியர் சமூகத்தை இப்படத்தில் தவறான முறையில் காட்டியது தவறு என்று ஒப்புக் கொண்டார்.
ஆனால் சூர்யா தன் தரப்பிலிருந்து எதுவும் கூறவில்லை. அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக சூரியாவின் அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வரக்கூடாது என்று பலர் எதிர்த்து வந்தனர்.மேலும் அனைத்து திரையரங்கு மேலாளர்களை கண்டு, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியிடக்கூடாது என அம்மாவட்ட பாமக உறுப்பினர்கள் தங்கள் மனுவை வழங்கி வந்தனர்.மேலும் பல எதிர்ப்புகளை தாண்டி இன்று எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இருப்பினும் பல இடங்களில் படம் வெளியாகாமல் தடை விதித்துள்ளனர்.
வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா என்ற திரையரங்கில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியிடப்படவில்லை. அம்மாவட்ட பாமக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் படம் திரையிடப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் சூர்யாவின் திரைப்படம் திரையில் வெளியிடப்படவில்லை. ஓடிடி தளத்திலேயே வெளியிட்டு வந்தனர். தற்போதும் இதுபோல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் எதற்கும் துணிந்தவன் படம் ஓடிடி தளத்தை நோக்கி தான் செல்லும் எனக் கூறுகின்றனர்.