ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இவ்வாறு இருக்கையில் சிறிதளவு ஈவுஇரக்கமின்றி மகப்பேறு மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளது. அங்கு சிகிச்சை பெற்றுவரும் கர்ப்பிணி பெண்கள் இந்த தாக்குதலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டு இருக்கும்போதே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியது. அதனால் பல கர்ப்பிணி பெண்கள் காயம் அடைந்து உள்ளனர். காயமடைந்த கர்ப்பிணி பெண்கள் மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் மீது பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அமைதியான சூழலில் கூட இருக்க முடியாமல் உக்ரைன் பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. இதில் எத்தனை கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவல் தற்போது வரை வெளிவரவில்லை. பாதிப்படைந்த கர்ப்பிணி பெண்களை மாற்றி இடத்திற்கு கொண்டு செல்ல உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது. நாட்டை கைப்பற்ற மற்ற உயிர்களை துச்சம் என்று நினைக்கும் ரஷ்யா மீது பல நாட்டினர் பொருளாதார தடை விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.