மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை!
கொரோனா தொற்று மூன்று ஆண்டு காலமாக உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகள் பொருளாதார வகையில் பின்னடைவையே சந்தித்துள்ளது.தற்பொழுது வரை அத்தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.தடுப்பூசிகள் நடைமுறைபடுத்தப்பட்டும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையவில்லை.இந்த மூன்று ஆண்டுகாலத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டதுஇந்த கொரோனா தொற்றானது பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கியது.
தற்போது வரை பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் தீவீரம் காட்டி வருகிறது.குறிப்பாக இரண்டாம் அலையின் போது நமது இந்தியாவில் பல அரசியல்வாதிகள் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.அதிலும் பாஜக கட்சி சார்ந்தவர்கள் அடுத்தடுத்தாக இந்த கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.மூன்றாவது அலையாக ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தது.இந்த மூன்றாவது அலையில் மக்கள் அதிகளவு பாதிக்கப்படக் கூடாது என எண்ணி அரசாங்கம் முன்கூட்டியே பல நடவடிக்கைகளை செய்து வந்தது.தற்போது மூன்றாவது அலையும் முடிவுக்கு வந்து நிலையில் நான்காவது அலை வரும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் என கூறி ஆராயிச்சியாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் தெலுங்கான முதல் மந்திரி உடல்நலக் குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இடது கையில் வெகு நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறியுள்ளனர்.இவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் விசேஷங்கள் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் முன்னேற்பாடுகள் அனைத்தையும் தற்போது ரத்து செய்துள்ளனர்.மேலும் இவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை கொடுத்து வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.மேலும் கட்சி நிர்வாகிகள் இவரை காண மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.மேலும் இவரது குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.