மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று கட்டுப்படுத்த முடிந்தது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசியும் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தி வந்தனர்.
முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை என்றாலும்,தற்போது அனைத்து மக்களும் விழிப்புணர்வுடன் செலுத்தி வருகின்றனர்.கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டும்,தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் இத்தொற்று பரவுவது தடுக்க முடியவில்லை.வருடந்தோறும் இந்த தொற்று பரினாம வளர்சி அடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.அத்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பூஸ்டர் போன்ற தடுப்பூசி தற்போது நடைமுறையில் உள்ளது.எத்தனை வகை தடுப்பூசி வரவழைக்கப்பட்டாலும் இத்தொற்று முடிவின்றி மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.இந்த பாதிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊராடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று குறைந்ததும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தகர்க்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகாலமாக பாதி நாட்கள் மக்கள் ஊராடங்கிலேயே கடத்தினர்.தற்போது தான் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர ஆரம்பித்துள்ளனர்.நமது இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மீதும் தொற்று பாதிப்பு உட்சத்தை தொடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு இருக்கையில் மீண்டும் சீனாவில் புதிய தொற்றானது பரவி வருகிறது. அதனால் சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். இந்த புது தொற்றானது அதிக அளவில் தீவிரம் காட்டி வருவதால் தற்போது அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இத்தொற்று அனைத்து நாடுகளிலும் பரவாமல் இருக்க மேற்கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.