சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!!

0
208
Sikhs barred from carrying kirban (knife) to airports? Air Traffic Action !!
Sikhs barred from carrying kirban (knife) to airports? Air Traffic Action !!

சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!!

500 ஆண்டுகளுக்கு முன்பு குருநானக் கால் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அதுதான் சீக்கிய மதம். இவர்களுக்கு என்று அதிக கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த மாதத்தை முதலில் 10 சீக்கிய குருக்கள் வளர்த்து வந்தனர். இந்து சீக்கிய மதத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் வழிபாடு சமய சடங்கு நம்பிக்கை என ஆகியவையும் அடங்கியதாக காணப்படும். இன்று உலகில் பெரிய சமயங்களில் ஐந்தாவது இடத்தில் இந்த சீக்கியம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் சீக்கிய மதத்தை அழிக்க பெரும் முயற்சி எடுத்தனர். மறுமுனையில் சீக்கியர்களை இந்துக்கள் எனக்கூறி சீக்கியர்களின் தனித்துவமான அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் நடைபெற்று வந்தது.

இந்த இரு தரப்பினரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய பொறுப்பு அப்பொழுது குரு நானக்கும் அவரது மற்ற சீக்கிய குருக்களுக்கும் இருந்தது. அவர்கள் வழக்கப்படி அனைத்து சீக்கியர்களும் இர்பான் எனப்படும் கத்தியை வைத்திருப்பது வழக்கம். அவரு வைத்திருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அனைத்து இடங்களுக்கும் செல்வர். இந்த கத்தியை சீக்கியர்கள் வன்முறைக்கு ஒருபோதும் பயன்படுத்துவது இல்லை. ஆனால் இவர்கள் கிர்பானை எடுத்து செல்வது  வழக்கமாக பின்பற்றி வருகின்றனர். 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் விமான நிலையத்தில் சீக்கியர் ஒருவர்கிர்பான் எனப்படும்  கத்தியை எடுத்து சென்றது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் சட்டத்தின்படி பொது இடங்களில் கத்தி போன்ற இதர ஆயுதங்கள் வைத்திருந்தால் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்

மேலும் 300 டாலர் அபராதமும் கட்ட வேண்டும். இவ்வாறு அமெரிக்க விமான நிலையத்தில் சீக்கியர் ஒருவர் எடுத்து சென்ற கத்தியைப் பார்த்து அவர் மீது வழக்குத் தொடுத்தனர். மேலும் அவருக்காக வழக்கறிஞர் ஒருவர் வாதாடினார். கத்திகள் வைத்திருப்பது குறித்து அமெரிக்காவில் பலருக்கு பல  தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் சீக்கியர்களின் மத வழக்கங்களை மாற்ற இயலாது என வழக்கறிஞர் கூறினார். அதுமட்டுமின்றி இதேபோன்ற ஓர் வழக்கில் சீக்கியர்கள் கத்தி வைத்திருப்பது தவறில்லை என்று சீக்கியருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். அச்சமயத்தில் இந்த வழக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்பொழுது சீக்கியர்கள்  குருவாள் எடுத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டை விமானம் போக்குவரத்து அமைப்பு கூறியுள்ளது. இனி சீக்கியர்கள் விமானங்களில் செல்லும் பொழுது  கிர்பான்எனப்படும் கத்தியின்  நீளம் 22.6 சென்டிமீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். கூறிய நீளத்திற்கு மேல் இருந்தால் விமான நிலையங்களில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.சீக்கியர்கள் வன்முறைக்கு குருவாளை பயன்படுத்தவில்லை என்றாலும் மக்களின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!
Next articleமதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!