நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு காரிய வெற்றி உண்டு!

0
210

மேஷம்

இன்று தங்களுக்கு தொலைபேசி வழித் தகவல் காரணமாக ஆதாயம் கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் பண நெருக்கடிகள் உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.

ரிஷபம்

சில முக்கிய பிரபலங்களின் சந்திப்பு காரணமாக, முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் சம்பவமொன்று நடைபெறும் செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள் பயிற்சி திறமை காரணமாக, சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று பயணங்கள் பலன் தருவதாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இடமாற்றம் தொடர்பான இனிமையான தகவல் வந்து சேரும் பயணம் காரணமாக, பால்ய நண்பர் ஒருவரை சந்திக்க நேரலாம் வீடு இடம் வாங்குவது தொடர்பாக சிந்தனை தோன்றும்.

சிம்மம்

என்று தங்களுடைய நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள். சேமிப்பு அதிகரிக்கும் எண்ணம் ஏற்படும் குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும் வீடு மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு யோகமான நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவீர்கள் தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் உங்களுடன் இணைவார்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

இன்று தங்களுடைய கனவுகள் நனவாகும் நாள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சொல்லிய சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள் வீட்டிற்கு தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

தனுசு

இன்று தங்களுடைய வாக்கு எதிலும் வல்லமை பெற்றதாக இருக்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினை நீங்கும் உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

இன்றைய தினம் மதியத்திற்கு மேல் தங்களுடைய மனக்குழப்பம் நீங்கும் நாள் விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும் உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியம். அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நன்று.

மீனம்

இன்று தங்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். வாகன பராமரிப்புச் செலவு ஏற்படும் வாரிசுகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

Previous articleசூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி!
Next articleமீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்னவென்று தங்களுக்கு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here