சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி!

0
117

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். பல திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பிய போதிலும் திட்டமிட்டபடி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களின் வெற்றியால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானதால் சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைபடத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதற்கான பணியில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

author avatar
Parthipan K