இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!
சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு வடையில் பள்ளி ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சிற்ற மக்கள் மேற்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை.
அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சியில் நாகல் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் குழம்பில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அதிகாரிகளோ இதனை பெரிதும் கண்டு கொள்ளாமல் மக்களின் கண்தொடப்பிற்காக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திண்டுக்கல்லில் உள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளார்களா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மக்கள் உண்ணும் உணவு ஒரு நாள் காலவதி ஆனாலே ,மக்கள் அதை உண்பதால் உயிரே போகும் நிலை ஏற்படும்.
அதனை பெரிதும் நினைக்காமல் மக்களின் உயிரை துச்சம் என்று நினைத்து தற்போது திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இருந்து வருகின்றனர். மக்கள் ஆதாரங்களோடு நடவடிக்கை எடுக்க சொன்னாலும் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடக்கும் பிரச்சனையை சுமூகமாகவே முடிகின்றனர். இதனால் மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது அவ மதிப்பே உள்ளது. எங்கள் மக்களுக்காக சேவை செய்யாமல் உணவகங்களில் பணத்தை வாங்கிவிட்டு அவர்களுக்காக சேவை செய்கின்றனர் என்றும் ஒரு சிலர் புலம்பி வருகின்றனர்.