கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

0
140

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. எனவே கொரோனா பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.

இருப்பினும், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து தனது பரவும் திறனை அவ்வப்போது மாற்றியமைத்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறிக் கொண்டே வந்தது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. குறுகிய நாட்களிலேயே ஏராளமான நாடுகளுக்கு இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவி இருந்தாலும் கொரோனாவை போன்று பெரும் பாதிப்பு எதுவும் இந்த ஒமைக்ரான் வைரஸால் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்கொரியாவில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், கடந்த ஒருசில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது. எனவே இது கொரோனாவின் அடுத்த அலைக்கான ஆரம்பமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Previous articleசரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை! கெத்து காட்டும் உக்ரைன்!
Next articleகம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த?