தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இயற்றியுள்ளனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர்.
இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பே கிடைத்தது. ஏனென்றால் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் பல பெண்கள் பலனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள தாலிக்கு தங்க காசம் மற்றும் ரூ 50,000 நிதி என பெண்கள் பெற்று வந்தனர். கிட்டத்தட்ட 90 ஆயிரம் வரை பெண்களுக்கு திட்டத்தின் மூலம் கிடைத்தது.
ஆனால் தற்சமயத்தில் இதனை மாற்றி உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்று தற்பொழுது மாற்றி அமைத்துள்ளனர். இதனால் ஏழை எளிய பெண்கள் திருமணம் நடத்துவது சற்று கேள்விக்குறியாக உள்ளது. பல தரப்பினர் தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் செய்ததில் மகளிர்க்கு மாதம் ரூ ஆயிரம் வழங்குவது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. மக்கள் அதனை எதிர்பார்த்த வந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதேபோல எரிவாயுவின் விளையும் குறைந்த பாடு இல்லை.
இவ்வாறு இருக்கையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்ததில் கூறிய திட்டங்கள் சரிவர செயல்படுத்த முடியுமா என்று மக்களின் கேள்வியாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, தமிழக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்துவதாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்னை இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண திட்டத்தை மாற்றி அமைத்து புதிய திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.