பயந்தாங்கொள்ளி நேச நாடுகள்! உக்ரைன் அதிபர் விளாசல்!

0
128

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24 ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.

இதனால் உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்தது, அதோடு அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.மேலும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல்வேறு நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து மீட்டு வருகின்றனர்.

அத்துடன் இந்தப் போரை நிறுத்திவிட்டு சமாதான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்தும் அதனை ஏற்க மறுத்துவிட்டது ரஷ்யா.இந்த நிலையில், தொடர்ந்து 25 நாட்களை கடந்து போர் நடைபெற்று வருகிறது, அதோடு அந்த நாட்டின் பல முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய கட்டுமானங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மேலும் ரஷ்யப் படைகள் ராணுவ நிலைகள் மீது மட்டுமே குறி வைப்போம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்சமயம் அதற்கு மாறாக பொதுமக்களையும் கொன்று குவித்து வருகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த குடிமக்களில் 900க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 1400 க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள் என்று ஐநா மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் இருநாட்டு தரப்புகளும் ராணுவ வீரர்களையும் இழந்திருக்கிறார்கள்.

ரஷ்யா கொடுத்துவரும் இந்தத் தாக்குதலை உக்ரைன் தன்னந்தனியாக எதிர்கொண்டு வருகிறது ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் பொது ஊடகம் ஒன்றுக்கு அந்த நாட்டின் அதிபர் வழங்கிய பேட்டியில் நேட்டோ அமைப்பு ஒன்று எங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் ஏற்றுக் கொள்ளவில்லை என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், இரண்டுமில்லாத ஒரு நிலையை நேட்டோ அமைப்பு கடைபிடித்து வருகிறது. இது ரஷ்யாவை கண்டு நேட்டோ அமைப்பு பயம் கொண்டிருக்கிறது என்பதையே தெள்ளத் தெளிவாக காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Previous article2 டன் எடை கொண்ட திராட்சையால் விநாயகருக்கு அலங்காரம் செய்து அசத்திய விவசாயிகள்;
Next articleமாணவர்கள் பள்ளிகளுக்கு இனி இவ்வாறு வந்தால் அதிரடி நடவடிக்கை! கடுமையாக எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!