மாணவர்கள் பள்ளிகளுக்கு இனி இவ்வாறு வந்தால் அதிரடி நடவடிக்கை! கடுமையாக எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

0
79

சமீபகாலமாக தமிழகத்தில் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது வாடிக்கையாகிவிட்டது ஆனால் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதியாகும்.

இருந்தாலும் இதனை யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை, 12 வயது ஆகிவிட்டாலே இருசக்கர வாகனத்தில் எல்லோரும் பறந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு விவரம் அறியாத வயதில் இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து அதன் காரணமாக விபத்தில் சிக்கி பலர் பலியாகியிருக்கிறார்கள்.

பலருடைய வாழ்வு சூனியமாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும்கூட பெற்றோர்களிடையே இது தொடர்பாக எந்தவிதமான விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதாவது சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அதிகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இதன் காரணமாக, சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதாக புகார்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

அதில் தமிழ்நாட்டில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பள்ளிக்கல்வித்துறையில் வெளியிட்டிருக்கும் மற்றொரு அறிவிப்பில் 10 ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு தொடங்கப்பட அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்த 2 வருடங்களாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்ட காலத்திலும்கூட உடற்கல்வி க்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று சூழ்நிலையில், 3வதுஅலைக்குப் பின்னர் பள்ளி திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பிறகு தற்போதுதான் உடற்கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே இந்த உடற்கல்வி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் அதே சமயம் 10, 11, மற்றும் 12,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறவிருப்பதால் அவர்களுக்கு மற்றும் உடற்கல்வி பாடத்திட்டத்தில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.