இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை அந்நாட்டில் பலமடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலக்கரி வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு பெரும் எரிபொருள் தட்டுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. கேஸ் சிலிண்டருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பல இடங்களில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கு பெருமளவு இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு தாள்கள் மற்றும் மை போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டில் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
எனவே தற்போது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடன் உதவி அளிப்பதாக அறிவித்தது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நுகே கொட பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கலந்து கொண்டனர். அவர்கள் தெல்கட சந்தியில் இருந்து நுகே கொட சந்தி வரை பேரணியாக சென்றனர்.