இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டசபை! எதிர்கட்சிகள் அதிரடி ப்ளான்!

Photo of author

By Sakthi

வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தமிழக சட்டசபையில் அந்தந்த நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.அப்படி தாக்கல் செய்யப்படும் பொது நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களுக்கு மாநில அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அந்த திட்டங்களை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடும்.

அந்த விதத்தில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2 நிதிநிலை அறிக்கைகள் மீதும் 24ஆம் தேதி வரையில் விவாதம் நடந்து அமைச்சர்கள் பதிலளித்த பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் துறை ரீதியான மானிய கோரிக்கை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மறுபடியும் கூடவிருகிறது முதல் நாளான இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என சொல்லப்படுகிறது.

அதேபோல ஒவ்வொருநாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும் அப்போது அனல் பறக்கும் விவாதம் இடம்பெறலாம். துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை அவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு விவகாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்புவதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.