அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு
தமிழகதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது பணியை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 – 14 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன.
இந்த தற்காலிக பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அனுமதி முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு வரும் 2024 ஜூன் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.