திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேவுள்ள நாலாம் சேத்தியை சார்ந்தவர் தேவதர்ஷினி 21 வயது நிரம்பிய இவர் வீட்டுக்கு ஒரே மகள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இவர் பிஏ பட்டதாரி ஆவார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது இவர்களுடைய திருமணம் கீழ்வேளூர் கிராமத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கடந்த சில வாரங்களாக மணமக்கள் வீட்டார்கள் தீவிரமாக செய்துவந்தார்கள் இந்த சூழ்நிலையில், நேற்று காலை தேவதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த அகல்யா என்ற 21 வயது பெண். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சார்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது இன்று இவர்களுடைய திருமணம் திருப்புவனத்தில் நடைபெற இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வீட்டிலிருந்த அகல்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், இதன் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.