சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

0
218
Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!
Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்த நிலையில் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் என்று சோதனை நடத்தினர். அவரை சோதனை நடத்தியதில் படுவா பேட்டை பகுதியில் தண்ணீர் தொட்டி முன்பு மினி லாரி ஒன்று சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்தது. மேலும் அந்த நாளில் நின்றுகொண்டிருந்த அருகில் ஒரு வீடு இருந்தது. போலீசார் அந்த லாரி மற்றும் வீட்டை சோதனையிட்டனர். அவரை சோதனை செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வீட்டினுள் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அந்த 2 டன் ரேஷன் அரிசி யையும் கைப்பற்றினர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்டால் பிரவீன் குமார் மற்றும் சந்தோஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இவர்கள் ரேஷன் அரிசியை ஐந்து ரூபாய்க்கு வாங்கி, அதனை மாவாக அரைத்து சேலத்தில் இயங்கும் உணவகங்களுக்கு அதிக விலை கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அப்பளம் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கொடுத்து வந்துள்ளனர். பல காலமாக அவர்கள் செய்து வந்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்!
Next articleமீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!