மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களில் கையெழுத்திட்டது. மக்களுக்காக திட்டங்கள் பயனளிக்கும் வகையில் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இலங்கை அன்னிய செலவாணி இல்லாமல் பொருளாதாரத்தில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. நாளடைவில் இந்தியாவிலும் அந்நிலை ஏற்படும் என்று கூறி வருகின்றனர். இலங்கை போல இந்தியாவும் வருவதற்கு மாநிலங்களில் இலவச சலுகைகளை காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு பல தரப்பினர் கூறிவருகின்றனர்.
2022 மற்றும் இருபத்தி மூன்றாம் ஆண்டு காலம் பட்ஜெட் தாக்குதல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. மதுரை அடுத்து இன்று ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு தருவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் அதிமுக அரசு பணியிலிருந்து நீக்கியது.
இதனை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு தரவில்லை. இம்முறை திமுக ஆட்சி என்பதால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க முடிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 7500வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் வேலை செய்த மக்கள் நல பணியாளர்கள் விருப்பமிருந்தால் மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.