இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
நமது இந்தியாவில் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அவரவர் படிப்பிற்கு ஏற்ற வேலையையும் செய்வதில்லை.கிடைத்த வேலையை நோக்கி தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இவ்வாறு இருக்கையில் சேலம் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் ஆப்பர் அடித்துள்ளது.அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தற்பொழுது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வேலை இல்லாத நபர்களுக்கு ஊர் வரபிரசாதமாக இருக்கும்.
நமது சேலத்தில் மூன்று மாதங்கள் குறுகிய பயிற்சியாக கை மற்றும் சுவர் கடிகாரம் பழுது செய்யும் வகுப்பு நடக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.இந்த வகுப்பை திறமைமிக்க டைடான்ஊழியர்களால் பயிற்றுவிக்கப்படுவதாக கூறியுள்ளார்.குறுகிய கால பயிற்சி முடிந்ததும் அடுத்தபடியாக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் திட்டம் வகுப்பதாக கூறியுள்ளார்.இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி 14 வயதிற்கு மேல் உடையவர்கள் மட்டுமே இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடிகாரம் பழுது பார்க்கும்பயிற்சியில் கலந்து கொள்ள வரும் 20 ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளார்.ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் பயிற்சியில் செருந்து பலனை பெறலாம் .மேலும் மக்களுக்கு இந்த வகுப்பு குறித்து ஏதேனும் சந்தேகமோ அல்லது விவரங்கள் தெரிந்து கொள்ள விருப்பபட்டால் சேலம் ஐஐடி யின் துணை இயக்குனரிடம் நேரில் சென்று கேட்டுக்கொள்ளலாம்.நேரில் செல்ல இயலாதவர்கள் 9500671416 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பயிற்சியில் சேருவதற்கு இந்த இணையத்தின் வாயிலாக https://forms.gleZqzMhNtVKp4hAhsw7 ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.