நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் கட்சி இரு பக்கமாக பிரிந்தது. பன்னீர்செல்வம் எடப்பாடி என்று ஒரு பக்கமும் சசிகலா என்று ஒரு பக்கமும் பிரிந்தது. இதன் நடுவில் அதிமுக கட்சியின் சின்னம் சிக்கி தவித்தது. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி ஆர்கேநகர் தேர்தல் நடைபெற்றது. இதில் இரு கட்சியினரும் சின்னத்தை பெற போட்டியிட்டனர். இதனைக் கண்ட தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.
இவ்வாறு நடந்து கொண்டிருந்த சூழலில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற உள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் மீது பல புகார்கள் எழுந்தது. இந்த லஞ்சப் பணத்தை தேர்தல் ஆணையத்திடம் சுகேஷ் சந்திரசேகரை வைத்து தர முயன்றதாக பல தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்த சுகேஷ சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில் சுகேஷ் சந்திரசேகரின் ஜூனியர் வக்கீலும் முக்கிய ஆதாரமாக இருந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற இருந்த நிலையில்,சென்ற வாரம் மர்மமான முறையில் எந்த காரணமுமின்றி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏதேனும் உண்மை அவரிடம் உள்ளதால் தான் அவரை கொன்று விட்டார்கள் என்றும் பலர் பேசி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் டிடிவி தினகரனுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதனை அடுத்து நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு முறை சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு வாக்கு மூலத்தை கொடுத்து வருகிறார். இதற்குப் பின்னணியில் யாரோ உள்ளனர். நான் இதுவரை சுகே சந்திரசேகரிடம் பேசியது கூட இல்லை. நான் நிரபராதி. நான் எந்த தப்பும் செய்யல என செய்தியாளர்களிடம் கதறிய வாக்கில் பேட்டி அளித்தார். என்னை இந்த வழக்கில் மாட்ட வைப்பதே பலரின் நோக்கமாக உள்ளது என்று கூறினார். அதேபோல சுகே சந்திரசேகர் விசாரணைக் குழுவிடம் ரூ 10 கோடியை டிடிவி தினகரன் தன்னிடம் தந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த வாக்குமூலத்தை முற்றிலும் டிடிவி தினகரன் மறுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கும் மேலாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை குழு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.