மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!

0
144
Grandmother who lived off the soil! Shame on the sons of government jobs abandoned!
Grandmother who lived off the soil! Shame on the sons of government jobs abandoned!

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!

பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தங்களது உழைப்பை தருகின்றனர்.நாளடைவில் தங்களது கனவு நினைவானதும் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தூக்கி எரிந்துவிடுகின்றனர்.அவர்களின் கடைசி காலத்தில் கூட இருக்க விரும்புவதில்லை.முதியோர் இல்லம் போன்றவற்றில் சேர்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.இவ்வாறான  ஓர் சம்பவம் தஞ்சாவூர் அருகே அரங்கேறியுள்ளது.தஞ்சாவூர் அருகே காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் ஞானஜோதி.

இவருக்கு மூண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஆனால் தற்போது ஒருவர் கூட பார்க்க முடியாமல் நிர்கதியாக உள்ளார்.இவரது இரண்டு ஆண் பிள்ளைகள் அரசு வேலையில் நல்ல ஊதியத்தில் உள்ளனர்.இவரது மகள் பத்து வருடத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.இவரது முதல் மகன் சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இவரது இரண்டாவது மகன் பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு இரண்டு மகன்களும் நல்ல சூழ்நிலையில் இருந்த போதிலும் அவரது தாயை பார்த்துக்கொள்ள மறுத்து வந்துள்ளனர்.இரண்டு அண்ணன் மற்றும் தம்பிக்கிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதில் சண்டையிட்டுக்கொண்டு தாயை கவனிக்க மறுத்து வந்துள்ளனர்.இவர் உடுத்த உடையின்றி சாப்பிட உணவின்றி வீட்டில் இருந்த மண்ணை உண்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.இவர் மண்ணை உண்ணும் ஓர் வீடியோ பதிவானது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமளவு வைரலானது.அதனை பார்த்த சிலர் உதவி மையத்தை தொடர்புக்கொண்டு இதை பற்றி கூறியுள்ளனர்.

பிறகு அந்த வீட்டிற்கு சென்ற சமூக நலத்துறையினர் வீட்டின் கதவை உடைத்து அந்த மூதாட்டியை மீட்டுள்ளனர்.அவர் சுயநலம் இன்றி அந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தனர்.அக்கம் பக்கத்தினர் கூறியது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.இவரது இரண்டு பிள்ளைகளும் வீட்டின் உள்ளே கூட செல்லாமல் நாய்க்கு பிஸ்கெட் தூக்கி போடுவது போல இவரது தாய்க்கு பக்கெட் வெளியே இருந்து தூக்கி போட்டு செல்வார்கள் என்று கூறினர்.

மேலும் அக்கம் பக்கத்தினர் இதனை கேட்டால் எங்களிடம் சண்டை தான் போடுவார்கள் என்று கூறுகின்றனர்.கடந்த பத்து வருடகாலமாக இவரது நிலைமை இவ்வாறு தான் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.மேலும் பூட்டை உடைத்தது குறித்து விசாரிக்க வந்த அவரது மகன் தன தாயின் நிலையை கண்டு சற்றும் வருந்தாமல்,தனது தம்பி இவரது பென்சன் தொகை ரூ.30000 ரூபாயையும் எடுத்து கொண்டு சென்றாதாக வருத்தத்துடன் கூறினார்.பணத்தின் மேல் உள்ள கவலை கூட அவரது தாயின் மேல் இல்லை எனபது வருத்தத்திற்குரியது.

Previous articleஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!
Next articleராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!