தமிழகத்தில் ஆளுநர் பதவி நீண்ட காலமாக காலியாகவே இருந்து வந்தது. அதற்கு உடனடியாக ஆளுநரை நியமிக்க வேண்டும் என முடிவு செய்த மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு மராட்டிய மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களை பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்தது. பின்பு சுமார் 2 ஆண்டுகாலம் அவர் அந்த பதவியில் நீடித்து வந்தார்.
இந்த நிலையில், தமிழகத்திற்கான நிரந்தர ஆளுநராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்த பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டார்.
சுமார் 3 ஆண்டுகாலம் அந்தப் பதவியிலிருந்த அவர் திடீரென்று சென்ற வருடம் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக உளவுத்துறையில் பணியாற்றிய ஆர் என் ரவி எனப்படும் ரவீந்திர நாராயணன் ரவி நியமனம் செய்யப்பட்டார்.
மத்திய அரசின் இந்த நியமனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆரம்பம் முதலே கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். அதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தது.
மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்த வரையில் ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சமீபத்தில் தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் வழியில் மன்னம்பந்தல் என்ற இடத்தில் சமூக விரோதிகளின் சதி செயலால் கார்களையும் கருப்பு கொடி கம்பங்களையும், கொண்டு ஆளுநர் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். அதாவது அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டிலேயே ஆளுநர் வாகனம் மீது கற்களையும், காம்புகளையும், கொண்டு தாக்குதல் நடத்தியதும் தமிழகத்துக்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை கண்கூடாக காட்டுகிறது என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தமிழக ஆளுநருக்கு இங்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு வழங்கும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்பதுடன், அந்தக் கட்சியின் சார்பாக இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ,எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
மேலும் தமிழக ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதோடு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் அவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஆளுநர் வாகனம் மீதும், பாதுகாப்பு வாகனம் மீதும் கருப்பு கொடியுடன் கூடிய தடிகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். காவல்துறையினரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்திருக்கிறது என தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசியல் மாண்பை கேவலப்படுத்தும் விதமாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு என்று அரசியல் நாகரீகமிருக்கிறது இந்த சம்பவத்தை இந்து முன்னணி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.