மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

0
134
No more weekend curfews? Interview given by the Secretary of Health!
No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது.

தொற்று பரவலுக்கு ஏற்ப பாதிப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது.உயிர் சேதங்கள் நடக்காமல் இருக்கவும் மக்களை தொற்றிலிருந்து மீட்கவும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை கடுமைபடுத்திவிடுகின்றனர்.அந்தவகையில் ஊரடங்கு என ஒன்றை அமல்படுத்திவிட்டால்,பாமர மக்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது.தற்போது வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.நாளை பிரதமர் மோடி அவர்கள் தொற்று பாதிப்பு குறித்து மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.கட்டுப்பாடுகள் தீவீரமாக்கப்படும் என கூறி வருகின்றனர்.30ற்கும் குறைவாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தது.ஆனால் தற்போது 100 மேல் அதிகரித்து வருகிறது.ஐஐடி யில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதாலும் எக்ஸ்இ வைரஸ் பரவி வருவதாலும் வார இறுதி ஊரடங்கு போட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்,சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தொற்று பாதிப்பானது குறைந்தே காணப்படுகிறது.ஊரடங்கு போடுவது குறித்து எந்தவித முடிவும் இல்லை.அதனால் ஊரடங்கு போடப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Previous articleதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!
Next articleமாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!