’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

0
227

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றும் அதில் அஜித், அர்ஜுன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சில ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்
வெங்கட் பிரபுவும் தனது ஒருசில பேட்டியில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் ஓகே சொன்னால் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அஜித்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் இப்போதைக்கு ’மங்காத்தா 2’ படம் இருக்காது என்றே கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வெங்கட்பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை மறைமுகமாக வெங்கட்பிரபுவும் சற்றுமுன் ஒரு டுவீட்டில் பதிவு செய்துள்ளார்

இதிலிருந்து ’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஒருவேளை ’மங்காத்தா 2’ ஆக இருந்தால் அஜித் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Previous articleநித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்
Next articleமகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here