6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

0
76

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு தற்போது நடைபெறவிருக்கிறது.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் கோட்பாடுகளை படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையிலிருந்து வருகின்றன.

இப்படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்காமல் இருந்து வருகின்ற நிலையில் நீதிபதிகளின் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்றம் சார்பாக ஒவ்வொருமுறையும் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால்

, உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு காலியாகவிருக்கின்ற நீதிபதிகளின் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது தான். ஆனாலும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படாமல் தான் இருக்கிறது.

நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக, பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுவது தாமதம் ஏற்படுகின்றன. வழக்கை விசாரிப்பதில் ஏற்படும் இந்த தாமதம் தான் குற்றவாளிகளுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39வது மாநாடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வீ.ரமணா தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதனையடுத்து நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில், இணையம் வழியாக ஒன்றிணைப்பது, மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவைப்படும் மனித வளம் பணியாளர் கொள்கை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு திறன் வளர்ப்பு, நீதியரசர் சீர்திருத்தங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், போன்றவற்றை பற்றி விவாதிக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleபாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
Next articleஎன்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!