பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! உடந்தையாக இருந்த தாய் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

0
203

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுமளவிற்கு பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன.

ஆனாலும் என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தற்போதும் குறைந்தபாடில்லை.

இதற்குக் காரணம் என்னவென்றால். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் என தெரிவிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக கடந்த 2012ஆம் வருடம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நிர்பயா வழக்கு ஒரு மிகப்பெரிய சாட்சியாக விளங்குகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதில் சுமார் 8 ஆண்டு காலம் தாமதம் ஏற்பட்டது.

ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வது என்பது குற்றமற்றவர் என்று தன்னை நிரூபிக்க உண்மையிலேயே குற்றம் செய்யாதவர்களுக்கான ஒரு வாய்ப்பாக வழங்கப்படும்.

ஆனால் இதனை குற்றமற்றவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் பயன்படுத்துவது கிடையாது, இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குற்றம் செய்தவர்கள் தான் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில். சென்னை வேளச்சேரியை சார்ந்த தம்பதிகள் குமார் மற்றும் செல்வி இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவருக்கு 7 வயதிலிருந்தே தந்தை குமார் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

அந்த மாணவி 2019 ஆம் வருடம் 15 வயதாக இருந்தபோது அவருடைய தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த மாணவி இதன் காரணமாக, கர்ப்பமடைந்தார். அதனை அறிந்து கொண்ட குமார் கர்ப்பத்தை கலைத்திருக்கிறார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

7 வயது முதல் 16 வயது வரையில் தனது தந்தையால் கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பாகவும், அதற்கு தாயும், உடந்தையாக இருந்தது தொடர்பாகவும், அந்த மாணவி கடந்த 2020 ஆம் வருடம் வேளச்சேரி பள்ளியில் தன்னுடன் 11ம் வகுப்பு படித்து வந்த தோழிகளிடம் தெரிவித்து அழுதிருக்கிறார்.

ஆகவே இந்த விவரத்தை சக மாணவிகள் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்திருக்கின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை இது தொடர்பாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி இது தொடர்பாக கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்கள். காவல்துறையினர் மாணவியின் தந்தை, தாய், உள்ளிட்ட இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாய்க்கு சாகும் வரை சிறையிலிருக்கும் விதத்தில் ஆயுள் தண்டனையும், விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Previous articleஉக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள்! உக்ரைன் அதிபர் அதிர்ச்சி!
Next articleகத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!