ப்ளஸ் 2 பொதுத்தேர்வு! தேர்விற்கு வராத 32,674பேர்!

0
176

நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்து. வந்தனர். இதன் காரணமாக, கடந்த 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடைபெறும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், தற்போது நோய் பரவல் குறைந்து வருகின்ற காரணத்தால், இந்த வருடத்திற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் நேற்று ஆரம்பமானது. 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த தேர்வை 3, 119 மையங்களில், 8.37லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.3,98,321 மாணவர்களும், 4,38,996 மாணவிகளும், இந்த தேர்வை எழுதினார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதைத் தவிர தனித்தேர்வர்கள் 28 ,358 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்வர்கள்6 பேரும், சிறைக் கைதிகள் 73 பேரும், இந்த தேர்வை எழுதினார்கள்.

இந்த சூழ்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்நாளான நேற்று 32,674 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லையென தேர்வு துறை தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினத்தில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தேர்வுத்துறை குறிப்பிட்டிருக்கிறது.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!
Next articleஅரசு பேருந்துகளில் இனி இவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!