ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!

0
142

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநில மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. அதனடிப்படையில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மந்தீப் சிங் உள்ளிட்டோர் களமிறங்கினர். முதல் ஓவரில் மன்தீப்சிங் ரன் எதுவும் எடுக்காமல் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பிறகு வந்த மிச்சேல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் வார்னருடன் ஒன்றிணைந்து சிறப்பாக விளையாடினார். விக்கெட்டுகள் இழந்தாலும் அவர் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

இன்னொருபுறம் ரிஷப் பந்த் ஹைதராபாத் பணியின் ஸ்டேடஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்ளிட்டவற்றை பறக்கவிட்டார். இதனை தொடர்ந்து அவர் அந்த ஓவரில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 33 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார். இன்னொருபுறம் ரோவ்மன் பவல் அதிரடியாக விளையாடினார். வார்னர்,பவல் உள்ளிட்டோர் இணைந்து ஐதராபாத் அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். மாலிக் வீசிய கடைசி ஓவரில் பவல் 18 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார்.

சிறப்பாக விளையாடிய வார்னர் 92 ரன்களிலும், பவன் 67 ரன்களிலும், ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 7 ரன்களிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை வழங்கினார்கள்.

அதன் பிறகு களம் புகுந்த ராகுல் திரிபாதி 22 கிராமங்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரன். ஐடன் மார்க்கம், உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தனர். அதன்பின்னர் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட இந்த இணை மிக சிறப்பாக விளையாடியது.

மிகவும் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார், விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடி ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத நிக்கோலஸ் பூரன் அரை சதமடித்தார்.

கடைசி 3 ஓவரில் 55 ரன்கள் தேவைப்பட்டநிலையில், வெகு சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.