சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்!
கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்தவண்ணம் ஆகத்தான் உள்ளது.
இதனை அனைத்தையும் சேர்த்து மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையின் போது, அரசு மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனக்கோரி மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து வரும் 18ம் தேதி சேலத்தில் அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்த கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். ராணுவத்தைப் போலத்தான் மருத்துவர்களும் மக்களின் உயிரை காப்பாற்ற மிகவும் போராடினர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தருவது அரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
அதேபோல சிகிச்சை அளித்து அதன் மூலம் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் குடும்பத்திற்கு தற்போது வரை எந்தவித இழப்பீடும் தரவில்லை. அவரது குடும்பத்தில் வேறு ஒருவருக்கு வேலையும் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ம் தேதி தனது உயிரைத் துறந்த டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் பிறந்த ஊரான சேலத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அனைத்து அரசு மருத்துவர் களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.