பண்ருட்டி வேல்முருகன் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக
திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவிலிருந்து பிரிந்து வந்த பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார்.தொடர்ந்து பாமகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த அவர் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக பண்ருட்டி தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவை மாநிலத்தில் ஆளும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.இதற்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சிகளும் திமுகவை ஆதரித்து வருகின்றன.
அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை அவர்களும் ஆளும் திமுகவை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.அரசியல் ரீதியாக இரு தரப்பும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவை பலவீனப்படுத்தும் வகையில் அக்கட்சியிலிருந்து முக்கிய நபர்களை பாஜகவிற்கு இழுக்கும் வேலையையும் அக்கட்சி செய்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகியான திருச்சி சிவா அவர்களின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது திமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அதே போல தற்போது திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களின் முன்னாள் மனைவி திருமதி காயத்ரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.குறிப்பாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரு தரப்பும் அரசியல் ரீதியாக தீவிரமாக எதிர்த்து களமாடி வரும் சூழலில் தங்கள் பக்கமுள்ளவர்கள் பாஜகவில் இணைவது திமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.