கல்லணையில் இன்று திறந்துவிடப்படும் நீர்! மகிழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள்!

0
129

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வரலாற்றில் முதல்முறையாக இன்று 24ஆம் தேதி மேட்டூர் அணையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூழ்நிலையில், திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக சுமார் 4 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 4 அமைச்சர்கள் 5 மாவட்டங்களின் சட்டசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு தண்ணீர் தடையின்றி செல்லும் விதத்தில் அனைத்து கால்வாய்களிலும் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கும்போது எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தூர்வாரும் பணிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது.

வடிகால் வாய்க்கால் கூட இந்த வருடம் சிறப்பாக தூர்வாரப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, மழை காலங்களிலும் மழைநீர் தங்கள் விளைநிலங்களில் புக வாய்ப்பில்லை என்றும், மழைநீரால் பயிர் பாதிக்காது என்றும், நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleநாளை விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்! இனி வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்!
Next articleஜாக்கெட் இல்லாமல் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்