நாளை விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்! இனி வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்!

0
180

கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மொத்தம் 25 நாட்களாகும். அதனடிப்படையில் இந்த வருடத்திற்கான அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது.

இந்த வருடம் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது.

அதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. இதன் காரணமாக, அக்னி நட்சத்திரத்தில் நிச்சயம் இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்ற பயம் பொதுமக்களிடையே காணப்பட்டது.

அதனடிப்படையில், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த கடந்த 4ஆம் தேதி முதலே வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது, ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.

மசானி புயல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே இருந்தது.

இதன் காரணமாக, இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெப்பம் தனிந்தே காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்த தொடங்கியது.

இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக கடந்த 23ஆம் தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் அடித்தது.

அதேபோல கடந்த 24ம் தேதி சென்னை, கரூர், மீனம்பாக்கம், கடலூர், பரமத்தி, மதுரை விமான நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வெயில் அடித்தது. இதனால் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆனால் சுட்டெரித்தது. அதோடு 24ஆம் தேதி தமிழகத்தில் ௧௩ பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.

தஞ்சாவூர், திருச்சி, வேலூர், திருத்தணி ,உள்ளிட்ட பகுதிகளில் தலா 102 டிகிரிக்கும் மதுரை, நாகப்பட்டினம், ஈரோடு, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.

அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைந்தாலும் கூட அதோடு சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஜூன் மாதம் நடைபெறவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Next articleகல்லணையில் இன்று திறந்துவிடப்படும் நீர்! மகிழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here