பாஜக பிரமுகர் கொடுத்த தொந்தரவால் தற்கொலைக்கு முயற்சி செய்த இளம்பெண்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

திண்டுக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா, இவர் குமரேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இதனிடையே கடந்த 2018ஆம் வருடம் குமரேசன் படுகொலை செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மனிஷா தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவரும் இவர்தான் குமரேசனின் சகோதரர் என்று தெரிவித்து அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த இரண்டு வருடங்களாக மனிஷாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்திருப்பதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த மனிஷா அவருடைய ஆசைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதற்கு நடுவே தினேஷ்குமார் தன்னுடைய கட்சி பலத்தை பயன்படுத்தி கொண்டு மனிஷாவின் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கியதோடு குடும்பத்தினரையும் வந்திருக்கிறார்.

இதனால் வேதனையடைந்த மனிஷா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதனை கண்ட அவருடைய சகோதரி மனிஷாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், என்னுடைய சகோதரியின் கட்டாய திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு கொடுத்து வரும் தினேஷ்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி வலியுறுத்தியிருக்கிறார்.