14-6-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
171

கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றினடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதனடிப்படையில், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து 24வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது 1 லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 60 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சற்றே நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. எரிபொருளை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அவற்றின் விற்பனையில் புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிதி சிக்கல்களுக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கான எரிபொருளை ஒவ்வொரு முறையும் அரசு இறக்குமதி செய்கிறது.

ஆனால் சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதத்திற்கு தேவைப்படும் எரிபொருள் இவை மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.

ஆகவே வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு மூலமாக வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மட்டுமே விடுமுறை ஜூலை முதல் வாரத்திலிருந்து அமலுக்கு வரும் என்றும் நிலையாக எரிபொருள் வழங்கும் சூழ்நிலை ஏற்படும் வரையில் இந்த நடைமுறை தொடரும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous articleகாவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு! ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம்!
Next articleமனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!