பெட்ரோல், டீசல் செயற்கை தட்டுப்பாடு நிலை நீடிக்குமா?  வாகன ஓட்டிகள் பெரும் அவதி!

Photo of author

By Rupa

பெட்ரோல், டிசல் செயற்கை தட்டுப்பாடு நிலை நீடிக்குமா?  வாகன ஓட்டிகள் பெரும் அவதி!

      கடந்த ஒரு சில வாரகாலமாக சென்னையில் கடுமையான பெட்ரோல், டிசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் இறக்குமதியை  குறைத்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி ஒரே விலையாக தான் இருந்தது.  எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை ஈடு செய்ய செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. ஆதலால் பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைத்தனர். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் மீது செயற்கை தட்டுப்பாடு சடத்தின் கீழ் குற்றச்சாட்டும் பதிவு செயப்பட்டது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலால் வரி குறைப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யுமாறு வலியுறுத்தினர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கும்  இரு தரப்பில் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்படுகிறார்.கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர்களை அவல நிலையில் உள்ளனர். உடனடியாக எண்ணெய் நிறுவனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்ப எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறிய நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை என்று நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.