ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா??

Photo of author

By Rupa

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா??

Rupa

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ,ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அகவிலைப்படி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வின் நடவடிக்கையால் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள் என மொத்தம் 22,510 ரேஷன் கடை ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.இதற்காக ஆண்டுக்கு 73 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என ஸ்டாலின்  கூறினார். ஆண்டுக்கு ஒரு முறை விலைவாசி உயருகிறது எனவும் இவற்றை சமாளிக்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பதை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது..