சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு!
சாலைகளில் மக்கள் தவறாக வாகனத்தை நிறுத்துவதால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால், மக்களுக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் தவறாக நிறுத்தும் வாகனத்தை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டும் என புதிய சட்டம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில், வாகனங்களை வைத்திருப்போர் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் சாலைகள் மற்றும் தெருக்களில் தவறாக நிறுத்தப்படுகின்றனர். இதனால் போக்குவரத்துத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதை தடுக்கவே புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என தீர்மானித்துள்ளார். தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது. சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு தாங்களே இடத்தை ஏற்படுத்திக்கொள்கிறனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
இதைபற்றி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசினார் . அந்நிகழ்ச்சியில் “நான் ஒரு புதிய சட்டம்” கொண்டு வரப்போகிறேன் என தெரிவித்தார். தவறாக வாகனங்களை நிறுத்தும் குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் தவறாக நிறுத்தும் வாகனங்களை படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கப்படும். அப்போதவாது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்” என குறிப்பிட்டார்.