குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
136

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப் 4  தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்  உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து என்ற  இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகாமலயே இருந்து வந்தது. கடந்த மார்ச் 29ம் தேதிதான் அதற்கான  அறிவிப்புகள்  வெளியானது.

குரூப் 4  தேர்வானது ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது.அந்த நிலையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் தமிழ் மொழி பாடப்பகுதிதான் முதலில் கணக்கிடப்படும் .அந்த பகுதியில் மொத்தம்  100  வினாக்கள் கேட்கப்படும். அதில்  40  மதிப்பெண் எடுத்தல் மட்டுமே பிற பாடங்களின் பதில்கள் கணக்கிடப்படும் என்றும் அறிவித்தனர்.

Previous articleஇராசிபுரத்தில் ஆற்று வெள்ளம் போல் உருண்டோடும் சாக்கடை கழிவு நீர் ! குடி நீரிலும் கலப்பதால் மக்கள் அவதி!
Next articleகவர்ச்சியில் சொக்க வைக்கும் தோனி பட நடிகை! ஜாக்கெட் இல்லாமல் இப்படி ஓர் போட்டோவா!