எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயம் இதை அனைவரும் செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த அதிரடி உத்தரவு!

0
169

நாட்டில் கடந்த 2 வார காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது, அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 552 பேருக்கு நோய்த்தொற்று செய்யபட்டுள்ளது.

இதன் காரணமாக, பொது மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை நிச்சயமாக பின்பற்ற வேண்டுமென பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வரும் 20ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற மதுரைகிளைக்கு வருவோர் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதனடிப்படையில், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், என்று எல்லோரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதி பிஎன் பிரகாஷ் தெரிவிக்கும் போது தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலின் 3வது அலைகளிலிருந்து தப்பி வந்திருக்கிறோம்.

இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி வரும் 20ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள், என்று எல்லோரும் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும். வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Previous articleஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!
Next articleமீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!