மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
75

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள்  ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்குச் சென்று பொதுத் தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் திருத்தம் ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று  பள்ளிக்கல்வித்துறை. அறிவித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத  மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை   பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பானது பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மாணவ மாணவிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது .அதில் பள்ளி  கல்வி துறை அமைச்சகம் கூறியுள்ளது என்னவென்றால் தற்போது நடைபெறும் மறு தேர்விற்கு மாணவ மாணவியர்கள் அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டு உடனடியாக தேர்வில் பங்கு பெறலாம் எனவும் கூறியுள்ளது. பயிற்சி என்றால் ஒவ்வொரு மாணவரும் எந்த எந்த பாடத்தில் தேர்வு எழுத வேண்டுமோ அந்தப் பாடத்தில் கவனம் செலுத்தி நன்றாக படித்து மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல் வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மறு தேர்விற்கு தயாராகும்  மாணவர்கள் மாதிரி தேர்வு எழுதிப் பார்ப்பது நல்லது. இப்போது தேர்வு நடை பெறுவதற்கான முறையான வழிமுறைகளை தொடங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதற்கான தேதி அண்மையில் வெளியிடப்படும்  எனவும் கல்வித்துறை கூறியுள்ளது.

author avatar
Parthipan K