பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை! அமைச்சர் வெளிட்ட முக்கிய தகவல்!
இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 1.1.2000 முதல் பிரிவு 30 ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ,ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்ப்பட்டால் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். ஓராண்டிற்கு மேல் பதிவு செய்ய அரசாணை 293 ன் படி வருவாய் கோட்டசியர் அவர்களிடம் ஆணையை பெற்று பதிவு செய்ய வேண்டும்.
பிறப்பு பதிவு செய்ய மருத்துவ நிறுவனத்தின் சான்றிதழும் மற்றும் இறப்பு பதிவு செய்ய நோயாளிக்கு சிகிச்சை சான்றிதழும் கொடுக்க வேண்டும்.சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.அதன்படி 1969ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு ,இறப்பு பதிவேடுகளை இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையில் 16,348 பதிவு மையங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சென்னையில் நடைபெற பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும் என தெரிவித்தார்.இந்த மாநாட்டு மலர் என்பது, புத்தக வடிவிலும், மின்னூல் வடிவிலும் வெளியிடப்படும். இந்த மாநாட்டின் முன்னோட்டமாக இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டு, நூற்றாண்டு இலச்சினை வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், சேகர், மற்றும் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அரசு உயரலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.