அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு

கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது.

அதனால்  ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது.

அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.மேலும் இப்பொழுது, தனியார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் போன்றவற்றை  நினைவில் கொண்டு இலங்கை அரசானது ஒரு முடிவு எடுத்துள்ளது.

அதில் திங்­கள்­ கி­ழ­மை­யிலி­ருந்து குறைந்­த­பட்ச ஊழி­யர்­கள் மட்­டும் வேலைக்கு வந்தால் மட்டும் போதும் என்றும், பொது நிர்­வா­கமும், உள்­துறை அமைச்சகமும் இணைந்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு வாரத்­திற்கு நான்கு நாட்கள் மட்டும்  அலுவலகத்தில் வேலை  என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில்   மீதமுள்ள நாட்கள் முழுவதும்  வீட்டில் இருந்து பணியாற்றலாம். எனவும் உணவு தட்டுப்பாடும் அதிகம் உள்ள காரணத்தால் ஐநா­வின் உலக உணவு திட்­டத்­தின் கீழ் கொழும்­பில் உள்ள 2,000 கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு உணவு  பெறுவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment