திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

0
200
Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?
Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம்
நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று
தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் க்கு  லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவமனையில் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவரை இரண்டு நாட்களுக்கு முடிவு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வேலூர் மற்றும்  ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல் நலம் கருதி நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Previous articleமத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு சாதகமா? பாதகமா?
Next articleஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு வெள்ளி வாகனங்கள் அர்ப்பணம்!